திருவள்ளுவர் தமிழ்எழுதி <body >
திருவள்ளுவர்எழுதி
 என்னைப்பற்றி
  • பெயர்: தமிழ்வாணன்
    நாடு: தமிழீழம்
    Thamillvanan@yahoo.com

    அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
    பகவன் முதற்கே உலகு

 உள்வரவுகள்
  • இணைப்பில் உள்ளவர்கள் :
  • இதுவரை உள்வந்தவர்கள்:
  • உங்கள்வரவு:

திருவள்ளுவர் தமிழ் எழுதி

திருவள்ளுவர் தமிழ் எழுதிக்கான இறுதி வேலைகள் பெரும்பாலும் நிறைவடைந்துவிட்டன. முழுநிறைவான தமிழ் உள்ளீட்டு செயலியை சாதாரண இணையப்பாவனைக்கு ஏற்றவகையிலே வடிவமைப்பதே நோக்கமாக இருந்தது.

வெளிவரும் இவ்வெழுதியில் நீங்கள் விரும்பியவாறு விரும்பிய இடங்களில் கிளிக்செய்து தட்டெழுதமுடியும்.

இதுவரை காலமும் இரண்டு கருத்துபெட்டிகள் பாவித்ததில் இருந்து தனிப்பெட்டிக்கு மாறுவதுடன். தட்டெழுதும்போதே ஆங்கில எழுத்துருக்கள் தோன்றாது தட்டெழுத முடியும்.

நான் எற்கனவே புதிய எழுத்துரு சம்பந்தமாக குறிப்பிட்டிருந்தேன். ஆங்கில ரோமன் ஸ்கிரிப்ரில் தட்டெழுதுபவர்கள் புதிய எழுத்துரு தேவையற்றது என கருதுவதால் தற்போது பாமினி எழுத்துரு பயன்படுத்துபவர்கள் இலகுவாக மாறிக்கொள்ளகூடிய விதத்தில் புதிய எழுத்துரு வடிவமைக்கப்பட்டுள்ளது. அது தொடர்பான கருத்துகளை ஆர்வமுள்ளவர்கள் முன்வைக்கலாம்.

இக்கருத்தூட்ட செயலியை உங்கள் இணையப்பக்கத்தில் இணைத்துக்கொள்ள விரும்பினால் இமெயிலில் தொடர்புகொண்டால் உங்களுக்கு ஏற்றவாறு மீயுரை அனுப்பிவைக்கப்படும். சிலர் தமது கருத்து பெட்டியை பிரதான பக்கத்தில் தோன்ற செய்யவிரும்புகிறார்கள். சிலர் பொப் அப் விண்டோவில் அதனை தனியாக உருவாக்க விரும்புவார்கள். உங்கள் விருப்பத்தை குறிப்பிடுங்கள்.

கருத்துக்கள் பகுதியை கிளிக் செய்து கருத்தூட்ட பெட்டியை பரிசோதித்துக்கொள்ளுங்கள்.

அன்புடன்
தமிழ்வாணன்.

பி.கு : ரிஸ்கி எழுத்துருவுக்கு மட்டும் தட்டெழுதிய வசனத்தின் இடையில் தட்டெழுதமுடியாது. இது எதிர்காலத்தில் தொடரும் பதிப்புகளில் நிவர்த்தி செய்யப்படலாம்.

தமிழம் எழுத்துரு பயன்பாட்டு உதவிக்குறிப்பு

தகுதிகாண் பரிந்துரைகள் தமிழ்மணம்.கொம்

|தனிஇணைப்புக்கு செல்ல

அன்புள்ளங்கள் அனைவர்க்கும் வணக்கங்கள்.
திருவள்ளுவர் தமிழ் எழுதி பற்றிய பகிர்வுகளையும் யும் தமிழம் எழுத்துரு பயன்பாடு பற்றிய சாதக பாதகங்களையும் பகிர்ந்து கொள்ளுமாறு வேண்டுகிறேன்.

தமிழம் எழுத்துரு பயன்பாட்டுக்கோவை இங்கே 


திருத்தம் தமிழம் எழுத்துரு பயன்பாட்டுக்கோவை இங்கே 


புதிய தமிழம் எழுத்துருவுக்கு மாறுவதன் மூலம் எதிர்பார்க்கக்கூடிய நன்மைகள்.
1. பாமினி எழுத்துருவை பயன்படுத்துபவர்கள் சூ கூ டூ ஜ ஸ ஷ பூ என்ற எழுத்துக்களை கீபோட் முழுவதும் தேடித்திரிய வேண்டியதில்லை.

2. பாமினியோ ரிஸ்கியோ பாவிப்பவர்கள் கணித குறியீடுகளை தட்டெழுதவோ வேறு (கீபோட்டில் உள்ள) அத்தியாவசிய குறியீடுகளையோ பயன்படுத்தவோ வேறு ஒரு எழுத்துருவுக்கு மாற வேண்டியதில்லை.

3. புதியவர்கள் தமிழ் தட்டெழுத பழக இலகுவானது.

4. ரிஸ்கி முறையை பயன்படுத்தி தட்டெழுதுவதன் மூலம் தமிழின் சரியான உச்சரிப்பு முறை எதிர்காலத்தில் பூரணமாக மாறிவிடும்.

அன்புடன்
தமிழ்வாணன். 


கருத்து சொல்ல வாங்க 


அவவவவவ 


arumai 


அருமையாக இருக்கிறது நல்ல விஷயம் நடத்துங்கோ 


.அஅஇஅnhகனஉஎகnhதnஅதம 


yenna 


உங்கள் புதிய தமிழம் எழுத்துரு ரைப் பண்ணும் புது முறை ஆலோசிக்கப்படவேண்டியதொன்று.ஆனால் இது எந்தளவிற்கு சாத்தியப்படும் என்று தெரியவில்லை.

பாமினியில் பழக்கப்பட்டவர் ஓரிரு எழுத்துப்பிழைக்காக இன்னொரு எழுத்துமுறைக்கு மாறமாட்டார்.அதே போலத்தான் மற்றைய எழுத்து முறைகளும்..

இது சம்பந்தமாக ஒரு ஆராய்ச்சி ரீதியிலான ஒரு கட்டுரையை எதிர்வரும் தமிழ்க்கணனி மாநாட்டில் சமர்ப்பியுங்கள்.பல வித கருத்து பரிமாற்றங்களுக்கும் உட்படும்போது சில புதிய பரிமாணம் கிடைக்கலாம். 


இன்றும் சில திருத்தங்களை செய்துள்ளேன். 1.கொன்வேட்டரின் சுமையையும் பாமினி எழுத்துருவுக்கும் 25 வீதத்தால் குறைத்திருக்கிறேன். ரிஸ்கி க்கும் அவ்வாறு குறைப்பதற்கு முயற்சி செய்துகொண்டிருக்கிறேன்.
2.மேலும் தொ தோ போன்ற எழுத்துக்களை தட்டெழுதும்போது கொம்பு எழுத்துகளை தட்டெழுதும்போதே அவை தோன்ற கூடியவாறு செய்திருக்கிறேன்.

இன்னும் சில திருத்தங்கள் இருக்கின்றன.

முக்கியமாக நோட்பாட்டில் தட்டெழுதுவதுபோலவே தட்டெழுதுவது போல தட்டெழுத கூடியவாறு பூரணமாக்கும்போதே இக்கருத்துப்பெட்டி முழுமையடையும்.
அது எப்போது என்பதே எம்முன் உள்ள கேள்வி. 


யணநஅளஉரஙாகைட 


aaa 


திருவள்ளுவர் எழுதிக்கான பதிப்பு -3 இல் உள்ள குறைபாடுகளை சுட்டிக்காட்டினால் தொடரும் பதிப்புகளுக்கு அது உதவியாக இருக்கும்.

அன்புடன்
தமிழ்வாணன்.



3.4.2005 அன்று 18.11 மணிக்கு பதிவுசெய்யப்பட்டது. 


தனிகருத்துப்பெட்டி பயன்படுத்துவதால் முன்பு கருத்து எழுதியவர்களின் பெயர்கள் விடுபட்டுள்ளன. அதன் காரணமாக மீண்டும் அது என்னால் மீள்பதிவு செய்யப்படுகிறது.

சுரதா அவர்கள் சொல்கிறார்.
உங்கள் புதிய தமிழம் எழுத்துரு ரைப் பண்ணும் புது முறை ஆலோசிக்கப்படவேண்டியதொன்று.ஆனால் இது எந்தளவிற்கு சாத்தியப்படும் என்று தெரியவில்லை.

பாமினியில் பழக்கப்பட்டவர் ஓரிரு எழுத்துப்பிழைக்காக இன்னொரு எழுத்துமுறைக்கு மாறமாட்டார்.அதே போலத்தான் மற்றைய எழுத்து முறைகளும்..

இது சம்பந்தமாக ஒரு ஆராய்ச்சி ரீதியிலான ஒரு கட்டுரையை எதிர்வரும் தமிழ்க்கணனி மாநாட்டில் சமர்ப்பியுங்கள்.பல வித கருத்து பரிமாற்றங்களுக்கும் உட்படும்போது சில புதிய பரிமாணம் கிடைக்கலாம்.

மீளபதிப்பு
தமிழ்வாணன்.



5.4.2005 அன்று 8.32 மணிக்கு பதிவுசெய்யப்பட்டது. 


தனிகருத்துப்பெட்டி அல்லாமல் பெயர் இமெயில் முகவரி இணையதள முகவரி இணைக்ககூடிய கருத்துப்பெட்டி நல்லது. அவ்வாறு செய்யமுடியாதா?



5.4.2005 அன்று 8.41 மணிக்கு பதிவுசெய்யப்பட்டது. 


எழுதிக்கொள்வது: krupa

நீங்க சொல்றது புரியவே இல்லையே.

"பழகிகொள்ள இலகுவாக இருக்கவேண்டும்." என்றால் என்ன? ஆங்கில (ரோமன் ஸ்க்ரிப்ட்) விசை அமைப்பையும் விட இலகுவானது வேறு எது? தட்டச்சுப்பொறி அமைப்பிலும்தான் விசைப்பலகைகள் இருக்கின்றனவே? நீங்கள் ஈகலப்பை, முரசு போன்ற மென்பொருட்களில் எந்த விசைப்பலகை அமைப்பைப் பயன்படுத்துகிறீர்கள்?

மீள்பதிப்பு
தமிழ்வாணன்.


5.4.2005 அன்று 9.3 மணிக்கு பதிவுசெய்யப்பட்டது. 


பாமினி எழுத்துருவை அடிப்படையாக கொண்டு தமிழம் எழுத்துரு தட்டெழுதும் முறை வடிவமைக்கப்பட்டுள்ளது. ரிஸ்கி எழுத்துருமுறை ஏற்கனவே பயன்பாட்டில் இருப்பதால் அது தேவையற்றது என கருதப்படுவதால்தான் இம்மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அன்புடன்
தமிழ்வாணன்.

5.4.2005 அன்று 9.5 மணிக்கு பதிவுசெய்யப்பட்டது. 


தனிக்கருத்துபெட்டி பயன்படுத்துவதே நல்லது என நானும் கருதுகிறேன். சுரதா அவர்களும் அதனையே தனது ஈழம் எழுதியில் குறிப்பிட்டிருந்தார்.

நாம் கருத்துகளை எழுதும்போது பெயரை கீழே குறிப்பிடுவதுடன் விரும்பினால் எமது இமெயில் முகவரியையும் தளமுகவரிக்கும் கொடுத்து இணைப்பு கொடுக்கலாம்.

நாம் சாதாரணமாக கடிதம் எழுதும்போது என்னசெய்கிறோமோ அப்படியே எமது பெயரை நாங்களாகவே இடுதல் நலலது தானே.

அன்புடன்
தமிழ்வாணன்.

5.4.2005 அன்று 9.6 மணிக்கு பதிவுசெய்யப்பட்டது. 


இன்று இலங்கையில் பெரும்பாலானோர் பாமினி எழுத்துரு தட்டைழுதும் முறையைதான் பின்பற்றுகிறார்கள். நானும் அதனைதான் பயன்படுத்துகிறேன். ஆனால் விண்டோசில் பயன்படுத்தக்கூடியவாறு ரிஸ்கி ( ஒலியியல் குறிஎழுத்துமுறை இருப்பதால் அதுபற்றியும் கவனத்தில் கொள்ளப்படவேண்டுமென்பதால் அதனையும் அதன் கொன்வேட்டரின் சுமையை குறைக்கவேண்டிய தேவை உள்ளது.

அதனையும் நேரம் கிடைக்கும்போது குறைக்க முயற்சிக்கிறேன்.

அன்புடன்
தமிழ்வாணன்.

5.4.2005 அன்று 18.7 மணிக்கு பதிவுசெய்யப்பட்டது. 


பெயருக்கும் இணையமுகவரிக்கும் தனித்தனி பெட்டிகள் இடுவது பற்றிய கருத்துகளை தெரிவியுங்கள்.

அன்புடன்
தமிழ்வாணன்.

8.4.2005 அன்று 0.15 மணிக்கு பதிவுசெய்யப்பட்டது. 


அது என்ன தமிழம்?

பாலநடராஜன்.

12.4.2005 அன்று 10.15 மணிக்கு பதிவுசெய்யப்பட்டது. 


அன்பின் பாலநடராஜன்.

நான் 2 3 நாட்களாக வலைப்பதிவுப்பக்கம் வரமுடியவல்லை. அதனால் உங்களுடைய கருத்துக்கு பதில் அளிக்கமுடியவில்லை.

நீங்கள் தமிழம் எழுத்துரு பற்றி கேட்டிருந்தீர்கள். முன்னர் தனியான கட்டமைப்பு ஒன்றை உருவாக்க முனைந்தபோதும் தற்போது புதிய எழுத்துருவுக்கு மாறுவதில் உள்ள கடின நிலைலைய கருத்தில் கொண்டு தேவையான அவசிய மாற்றங்களை பாமினி எழுத்துரு கட்டடைமைப்பில் செய்துள்ளேன்.

இதுபற்றி பதிவில் தெளிவாக குறிப்பிட்டுள்ளேன். அதனையும் வாசிக்கலாம்.

ரிஸ்கி எழுத்துருவை போல 26 ஆங்கில எழுத்துரு உள்ள கீகளை மட்டும் பயன்படுத்தி இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதில் எவ்வாறு தட்டெழுதுவது? இக்கருத்துபெட்டியில் கீழ் உள்ள திருவள்ளுவர் எழுதி -3 என்பதை கிளிக் செய்து உதவிக்குறிப்பை பார்வையிடலாம்.

அன்புடன்
தமிழ்வாணன்.



14.4.2005 அன்று 9.21 மணிக்கு பதிவுசெய்யப்பட்டது. 


மிகவும் நன்றாக இருக்கிறது.

பெயரை எழுதக்கூடியவாறும் இருந்தால் நல்லது.

Excellent.

17.4.2005 அன்று 1.56 மணிக்கு பதிவுசெய்யப்பட்டது. 


எழுதிக்கொள்வது: தமிழ்வாணன்

பெயர் இணையமுகவரி இணைக்ககூடியவாறு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அநாமதேயமான கருத்துகளை தவிர்க்கும் நோக்குடன் மீண்டும் இம்மாற்றம் செய்யப்பட்டுள்ளது.



17.4.2005 அன்று 15.23 மணிக்கு பதிவுசெய்யப்பட்டது. 


எழுதிக்கொள்வது: தமிழ்வாணன்

பரிசோதனை கருத்து.

24.4.2005 அன்று 20.07 மணிக்கு பதிவுசெய்யப்பட்டது. 


எழுதிக்கொள்வது: kobi

கோபி

11.5.2005 அன்று 14.29 மணிக்கு பதிவுசெய்யப்பட்டது. 


??????????????: kobi

thamizbiththa

11.5.2005 ????? 15.48 ??????? ??????????????????. 


??????????????: kobi

??????????????: kobi

thamizbiththa

11.5.2005 ????? 15.48 ??????? ??????????????????.

11.5.2005 ????? 15.48 ??????? ??????????????????. 


??????????????: kobi

??????????????: kobi

??????????????: kobi

thamizbiththa

11.5.2005 ????? 15.48 ??????? ??????????????????.

11.5.2005 ????? 15.48 ??????? ??????????????????.

11.5.2005 ????? 15.48 ??????? ??????????????????. 


எழுதிக்கொள்வது: தமிழ்வாணன்

என்ன கோபி அண்ணா நீங்கள் பதிவு செய்துள்ள பின்னூட்டங்கள் குழம்பி விட்டிருக்ககின்றன.

ஏதாவது வேறு பிறவுசரில் தட்டச்சு செய்தீர்களா? ஏன் என்றால் யுனிக்கோட் சப்போட் செய்யாத விண்டோவில் தட்டச்சு செய்துள்ளது போல உள்ளது.

12.5.2005 அன்று 0.04 மணிக்கு பதிவுசெய்யப்பட்டது. 


எழுதிக்கொள்வது: anurag

அன்புள்ள தமிழ்வாணன்

நீங்கள் ஈடுபட்டுள்ளது நல்ல முயற்சி. ஆனால் சுரதாவின் ஜாவாஸ்கிரிப்ட்களை அப்படியே எடுத்துப் போட்டிருக்கும் நீங்கள் திருவள்ளுவர் எழுதி எனப் பெயரிட்டு, இதைப் பயன்படுத்துவோர் இந்தப் பெயரையும் தமிழம் எழுத்துருவையும் நீக்குதல் கூடாது என்று கூறுகிறீர்கள். 'சுரதாவுக்கு நன்றி' என்ற வாசகத்தை நீங்கள் அந்தப்பெட்டியில் இணைத்திருக்க வேண்டாமா?

அடுத்து உங்கள் கருத்துப் பெட்டியில் சுட்டிகளைத் தேர்வுசெய்யும் radio button களில் "to change font, click on me" என்ற வாசகம் தோன்றுகிறது. அந்தச் சுட்டிகள் தட்டச்சு முறைகளைத்தான் மாற்றுமே தவிர எழுத்துருக்களை அல்ல. மேலும் தாங்கள் திஸ்கி எனக் குறிப்பிட்டிருப்பது ரோமன் தட்டச்சு முறை தானே தவிர திஸ்கியில் அமைந்த எழுத்துரு அல்ல.

தமிழம் என்ற புதிய தட்டச்சு முறையை முயன்றிருக்கிறீர்கள். தமிழ்99 மிக இலகுவானதாக இருந்தும் அதிகமாக வரவேற்புப் பெறவில்லை. நீங்களோ பாமினியை ஒட்டியே தமிழம் உருவாக்க முயல்கிறீர்கள்.

உங்களை குறைத்து மதிப்பிடவோ அதைரியப் படுத்தவோ அல்ல. சமீபத்தில் தமிழ் தட்டச்சு முறைகள் பற்றி தீவிரமாக ஆராய்ந்து வருவதால் நட்புரீதியாக என் மனதில் பட்ட குறைகளை எடுத்துக் கூற வந்தேன். மொழியியல் ரீதியாக சற்று ஆராய்ந்து புதிய முறைகளை உருவாக்குவது உங்களுக்கு நல்ல சிறப்பைத் தரும். ஒரு இலகுவான புதிய முறையின் தேவை இன்னமும் இருக்கத்தான் செய்கிறது.

பதி என்று ஒருமையில் கூறாமல் பதிக! அல்லது பதிக்க! எனலாமே.

ஆர்வக்கோளாறால் அவசரப் படாமல் நிதானமாக முயன்று சாதனை புரிய வாழ்த்துகிறேன்.

11.5.2005 அன்று 23.09 மணிக்கு பதிவுசெய்யப்பட்டது. 


எழுதிக்கொள்வது: anurag

அன்புள்ள தமிழ்வாணன்

நீங்கள் ஈடுபட்டுள்ளது நல்ல முயற்சி. ஆனால் சுரதாவின் ஜாவாஸ்கிரிப்ட்களை அப்படியே எடுத்துப் போட்டிருக்கும் நீங்கள் திருவள்ளுவர் எழுதி எனப் பெயரிட்டு, இதைப் பயன்படுத்துவோர் இந்தப் பெயரையும் தமிழம் எழுத்துருவையும் நீக்குதல் கூடாது என்று கூறுகிறீர்கள். 'சுரதாவுக்கு நன்றி' என்ற வாசகத்தை நீங்கள் அந்தப்பெட்டியில் இணைத்திருக்க வேண்டாமா?

அடுத்து உங்கள் கருத்துப் பெட்டியில் சுட்டிகளைத் தேர்வுசெய்யும் radio button களில் "to change font, click on me" என்ற வாசகம் தோன்றுகிறது. அந்தச் சுட்டிகள் தட்டச்சு முறைகளைத்தான் மாற்றுமே தவிர எழுத்துருக்களை அல்ல. மேலும் தாங்கள் திஸ்கி எனக் குறிப்பிட்டிருப்பது ரோமன் தட்டச்சு முறை தானே தவிர திஸ்கியில் அமைந்த எழுத்துரு அல்ல.

தமிழம் என்ற புதிய தட்டச்சு முறையை முயன்றிருக்கிறீர்கள். தமிழ்99 மிக இலகுவானதாக இருந்தும் அதிகமாக வரவேற்புப் பெறவில்லை. நீங்களோ பாமினியை ஒட்டியே தமிழம் உருவாக்க முயல்கிறீர்கள்.

உங்களை குறைத்து மதிப்பிடவோ அதைரியப் படுத்தவோ அல்ல. சமீபத்தில் தமிழ் தட்டச்சு முறைகள் பற்றி தீவிரமாக ஆராய்ந்து வருவதால் நட்புரீதியாக என் மனதில் பட்ட குறைகளை எடுத்துக் கூற வந்தேன். மொழியியல் ரீதியாக சற்று ஆராய்ந்து புதிய முறைகளை உருவாக்குவது உங்களுக்கு நல்ல சிறப்பைத் தரும். ஒரு இலகுவான புதிய முறையின் தேவை இன்னமும் இருக்கத்தான் செய்கிறது.

பதி என்று ஒருமையில் கூறாமல் பதிக! அல்லது பதிக்க! எனலாமே.

ஆர்வக்கோளாறால் அவசரப் படாமல் நிதானமாக முயன்று சாதனை புரிய வாழ்த்துகிறேன்.

11.5.2005 அன்று 23.12 மணிக்கு பதிவுசெய்யப்பட்டது. 


எழுதிக்கொள்வது: தமிழ்வாணன்

அன்பின் அனுராக், உங்களின் மனந்திறந்த மடலுக்கு நன்றி.

இக் கருத்தூட்ட பெட்டியில் நான் செய்திருக்கும் மாற்றங்கள் இதுவரை எந்த தமிழ் கருத்து பெட்டியிலும் செய்யப்படவில்லை.

உதாரணமாக தட்டச்சு செய்யும்போது தமிழ் எழுத்துக்கள் நேரடியாக ( ஆங்கில எழுத்துகள் தோன்றாமல்) தட்டச்சு செய்வது மற்றும் விரும்பிய இடங்களில் சேர்சரை விட்டு தட்டெழுதுவது என்பவை குறிப்பிடத்தக்கவை ஆகும்.இதில் கூட நான் இன்னும் திருப்திபடவில்லை. அடுத்த விடுமுறையின்போது இன்னும் பல திருத்தங்களை செய்ய இருக்கிறேன்.

அடுத்து நீங்கள் சுரதா அவர்களின் மீயுரைகளை அப்படியே பயன்படுத்தியிருக்கிறீர்கள் என கூறியிருந்தீர்கள். நீங்கள் குறிப்பிடும் ரோமன்ஸ்கிரிப்ற் மீயுரை தவிர மற்ற அனைத்திலும் 95 வீதம் வேறு கோடிங் முறையை கொண்டவை.மற்றும் ஜாவா ஸ்கிரிப்ற்றில் உள்ள replace() என்ற பங்சனை பயன்படத்தினால் அது சுரதா அவர்களின் பங்சன் என்பது போல கருதுவதுபோல இருக்கிறது.

மேலும் நான் வேறொரு கோடிங் முறையை கையாளத்தான் இருந்தேன் ஆனால் சுரதா அவர்கள் ஏற்கனவே அதுபற்றி ஏராளமான் விடயங்களை செய்துள்ளதால் அதனை பயன்படுத்தினேன்.

மேலும் எனது கோடிங்கில் மேலும் இருவரின் பங்சன்களை பயன்படுத்தி உள்ளேன். குறிப்பிட்ட பங்சன்களை பயன்படுத்தும்போது அதனை மீயுரைகளில் எழுதுவதே வழமை. தமிழிலும் அதனையே செய்யவேண்டும். அதனையே செய்தேன்.

மேலும் சுயமாக படித்துதான் இக்கருத்தூட்டபெட்டியை வடிவமைத்தேன் எனபதையும், ஆதலால் இன்னும் மெருகூட்டப்படலாம் என்பதையும் தமிழ் மூலமான் தட்டச்சு முறைக்கு சுரதா அவர்களே எனக்கு அத்திவாரமிட்டவர் என்பதையும் அதன் அடித்தளம் அவரே என்பதையும் நான் எந்த கணத்திலும் மறந்துவிட வில்லை என்பதையும் அவரது ஆலோசனைகளை பெற்றுக்கொள்வதிலும் ஆர்வமாக இருந்தேன் என்பதையும் உங்களுக்கு கூற விளைகிறேன்.

பதி என்பதை பதிக என மாற்றுகிறேன். ஆலோசனைக்கு நன்றி.

தமிழம் 99 முறையில் கீபோட்டில் உள்ள குறியீட்டு கீகளும் பயன்படுத்தப்படுவதால் அதனை விரும்பவில்லை. ஆங்கில் எழுத்துகள் உள்ள 26 கீகளை மட்டுமே பயன்படுத்துவது நல்லது. ஆங்கில உச்சரிப்பில் எழுதுவது தமிழ் உச்சரிப்புக்கு ஆரோக்கியமானதல்ல என கருதியதால் ரோமன்ஸ்கிரிப்ரை விரும்பவில்லை.

மேலும் திஸ்கி ரோமன்ஸ்கிரிப்ற் வேறுபாடுகளை அறியதந்தால் மகிழ்ச்சி அடைவேன்.உங்கள் ஆய்வு வெற்றி பெற வாழ்த்துகள்.



12.5.2005 அன்று 10.24 மணிக்கு பதிவுசெய்யப்பட்டது. 


எழுதிக்கொள்வது: anurag

அன்புள்ள தமிழ்வாணன்

சுரதா குறித்து நான் எழுதக் காரணம் eelam என்பது அவரது ஜாவாஸ்கிரிப்ட்களுக்கே உரிய குறியீடு என்பதால் தான். மீயுரையில் அவரது பெயர் குறிப்பிடப் பட்டிருப்பதை நான் கவனிக்கவில்லை. மன்னிக்கவும்.

நீங்கள் சொன்னபடி தமிழம் முறையில் 26 ஆங்கில எழுத்துக்களில் தட்டச்சு செய்யும்போது தமிழ் உயிரெழுத்துக்களே கூட முழுமை பெறவில்லையே. தமிழுக்கே CAPS பயன்படுத்த வேண்டியுள்ளதே. உயிரெழுத்துக்களே முழுமையாக தட்டச்ச முடியாதபோது 26 எழுத்துக்களில் தட்டச்சும் முறை என்று எப்படிச் சொல்கிறீர்கள்?. தமிழம் விசைப் பலகை முறையை பாமினிக்கு மாற்றாக நிச்சயம் சிபாரிசு செய்யலாம். (பாமினியை எளிமைப் படுத்தியதால்!).

மற்றபடி உங்கள் எழுதியின் சிறப்புக் குறித்து நீங்கள் எழுதியவை சரிதான். பாராட்டுக்கள்.

நீங்கள் எனது பதிவில் எழுதிய மறுமொழியில்
//நீங்கள் தமிழ்99 விரும்புவது போல கிருபா அவர்கள் திஸ்கியையும் நான் தமிழம் முறையையும் விரும்புகிறோம்//
என்றே மறுபடியும் குறிப்பிடுகிறீர்கள். அவர் விரும்புவது ரோமன் முறை என்றிருக்க வேண்டும். திஸ்கி என்பது யூனிகோடு போல ஒரு எழுத்து முறை. நீங்கள் முழுமையாக யூனிகோடு தான் பயன்படுத்துகிறீர்கள். எனவே உங்கள் செயலியில் திஸ்கி என்றிருப்பதையும் ரோமன் அல்லது ஒலியியல் என்று மாற்றுவது நல்லது. "to change font, click on me" என்பதை
"to change keyboard, click on me" என்றும்.

எனக்கு கணினி இயக்குவதற்கு முன்னால் எந்தத் தட்டச்சு முறையும் தெரியாது. ஆரம்பத்தில் Microsoft onscreen-keyboard பயன்படுத்தி தட்டச்சி வந்தேன். பிறகு பாமினி கிடைத்தது. அதுவும் (ஒரு விரல்) தட்டச்சுக்கு கடினமாகவே இருந்தது. தமிழ்99 மற்றும் ரோமன் கிடைத்து இரண்டையும் அலசி ஆராய்ந்த போது தமிழ்99 shift key உதவியில்லாமல் தமிழ் எழுத்துக்கள் முழுவதையும் தட்டச்ச முடிவதைக் கண்டறிந்தேன். ஒரு விரல் தட்டச்சுக்கு இது மிக அவசியமான வசதி. வலைப்பதிவுகளுக்கு மறுமொழி இட நிறையச் சந்தர்ப்பங்களில் ரோமனையும் நான் பயன்படுத்துகிறேன். ரோமன் முறையில் ஆங்கிலமே அடிப்படை என்பதால் அதை தமிழுக்கான நிரந்தரமான தட்டச்சு முறையாக ஏற்பதில் தயக்கமுண்டு.

தமிழ்99 முறையின் முக்கிய குறைபாடு சில அவசியக் குறியீடுகளின் மீதும் எழுத்துக்கள் ஆக்கிரமித்திருப்பது தான். ஒரே முறையில் எல்லா தமிழ் எழுத்துக்களும் இடம்பெறவேண்டிய அவசியத்தில் (அவசரத்தில்) அப்படிச் செய்து விட்டார்கள் போலிருக்கிறது. ஆனால் இந்தக் குறியீடுகளை நாமே shift அழுத்திய வெற்று சாவிகளில் (நிறைய சாவிகள் வெற்றிடமாகவே இருப்பதால்) உருவாக்கி விட்டால் போதுமே. தட்டச்சுச் செலுத்திகளின் தயாரிப்பாளர்களும் வழியே அந்த மாற்றங்களை இணைத்துக் கொள்வார்கள். மற்றபடி இம்முறையில் தமிழை (மட்டும்) எழுத shift தேவையே இல்லை. உயிர் 12, மெய் 18 மற்றும் ஒற்றுக்கு ஒன்று என 31 சாவிகளின் (26 ஆங்கில எழுத்து மற்றும் 5 குறியீடுகளின் சாவிகள்!) உதவியால் 217 உயிர்மெய் எழுத்துக்கள் உட்பட எல்லா எழுத்துக்களையும் தட்டச்ச முடிகிறது.
இது என் தனிப்பட்ட விருப்புவெறுப்பு அடிப்படையில் அல்ல. பயன்பாட்டின் அடிப்படையில் நான் கண்டறிந்த விதயங்கள்.

இலங்கையில் தட்டச்சுப் பயின்றவர்கள் பாமினியும் மற்றவர்கள் பிற தட்டச்சு முறைகளும் கற்றிருப்பார்கள். இனி வரும் தலைமுறை எந்தத் தட்டச்சு முறையையும் முறையாகப் பயின்றிருக்க வாய்ப்பில்லை. அதனால் காலப்போக்கில் பயிற்சி பெற்ற தட்டச்சு முறைகளின் பயன்பாடு குறைந்து போகும். அப்போது கணித்தமிழை எந்த முறையில் உள்ளீடு செய்வது? தமிழுக்கான மாற்று எது?

அந்த மாற்றை பாமினி போன்ற பயிற்சி பெற்ற தட்டச்சு முறைகளோடு தொடர்பு படுத்தாமல் பயன்படுத்துவோருக்கு எளிமையானதாக புதிதாக உங்களைப் போன்றவர்கள் தான் உருவாக்க வேண்டும்/உருவாக்க முடியும். அவ்வாறு உருவாகாத பட்சத்தில் தமிழ்99 தவிர வேறு மாற்று இப்போதைக்கு இல்லை.

நன்றி.

12.5.2005 அன்று 10.52 மணிக்கு பதிவுசெய்யப்பட்டது. 


எழுதிக்கொள்வது: கோபி

தமிழ்வாணன்,

மேலே என்ற பெயரில் ஏதோ எழுத முயற்சித்திருப்பது நானல்ல, யாரென்றும் விளங்கவில்லை. (அவர் உபயோகித்துள்ள சுட்டிகள் எந்த வலைத்தளத்திற்கும் செல்லவில்லை)

அவரும் கோபி என்ற பெயரிலேயே கருத்துக்கள் பதிந்தால் பெயர்க்குழப்பம் வருமே! யாரென்று தெரிந்தாலாவது பேசிப்பார்த்து தனித்துவத்தை காத்துக் கொள்ள முடியும்...

ம்ம்.. என்ன செய்யாலாம்...

ப்ரியமுடன்,

கோபி

12.5.2005 அன்று 12.39 மணிக்கு பதிவுசெய்யப்பட்டது. 


எழுதிக்கொள்வது: தமிழ்வாணன்

அன்பின் அனுராக்,

உங்களுடைய விளக்கமான பதிலுக்கு மிகவும் நன்றி.

நீங்கள் குறிப்பிடுவது போல இச்செயலியில் தட்டச்சும் முறையைத் தான் குறிப்பிட்டிருக்கவேண்டும். அது வெளிப்படையாக அதைத்தான் சுட்டும் என்ற எண்ணத்திலே அப்படியே விட்டுவிட்டேன். திஸ்கி என்று எழுதுவதற்கு பதிலாக ஒலியியல் அல்லது ரோமன் என குறிப்பிடுவது நல்லது என கூறியிருந்தீர்கள்.

இவைபற்றி முழுமையாக கவனத்தில் கொள்கிறேன்.

மீண்டும் உங்கள் ஆலோசனைக்கு நன்றி கூறுகிறேன்.




அன்பின் கோபி அண்ணா.
இணையத்தில் வழமையாக ஏற்படும் இந்த கோளாறால் ஏற்பட்ட அசெளகரியங்களுக்கு மனம் வருந்துகிறேன்.


12.5.2005 அன்று 17.29 மணிக்கு பதிவுசெய்யப்பட்டது. 


எழுதிக்கொள்வது: தமிழ்வாணன்

அன்பின் அனுராக்,

நீங்கள் குறிப்பிடும் தமிழ் 99 தட்டெழுதும் முறையில்
க + ஒ = கொ
க + ஆ= கா
க + இ = கி

என தட்டெழுதவேண்டும் என நினைக்கிறேன்.

இவ்வாறு தட்டெழுதுவது கணனி முறைப்படி சரியாக இருக்கலாம். ஆனால் நடைமுறையில் சரியாக இருக்குமா?

க + ா = கா
ெ + க + ா = கொ
க + ி = கி

இப்படி தட்டெழுதி பெற்றுக்கொள்வது இலகுவாக இல்லையா? கற்பவர்களுக்கும் இம்முறை இலகுவாக இருக்கும் அல்லவா?

12.5.2005 அன்று 18.06 மணிக்கு பதிவுசெய்யப்பட்டது. 


எழுதிக்கொள்வது: anurag

பாமினி/தமிழம்- ெ + க + ா = கொ
தமிழ்99- க + ஒ = கொ

நீங்களே குறிப்பிட்டிருப்பது போல பாமினி/தமிழம் முறையில் 'கொ' என்ற எழுத்தை எழுத மூன்று முறை தட்ட வேண்டியிருக்கிறது. இன்னும் பல எழுத்துக்களுக்கும் அப்படித்தான். ரோமன் முறையும் அவ்வாறானதுதான். தமிழ்99 முறையில் தான் குறைந்த பட்ச தட்டுகள்! அதிகபட்சம் எல்லா உயிர்மெய் எழுத்துக்களுக்கும் 2 தட்டுகள்தான். தவிர நேரடி உயிர்+மெய் கூட்டிணைவு காணமுடியும்.

கையால் எழுதும்போது குறியீடுகளை இடுவது தவிர வேறு வழியில்லை. கணினியோ எழுத்துக்களின் கூட்டிணைவை தனித்தனி எழுத்துக்களாக்கித் தருகிறது. இது ஒரு சாதகமான அம்சம்தானே தவிர பாதகமான அம்சமல்ல.

வெறும் அரைமணி நேரம் செலவிட்டாலே நீங்கள் இந்த layout இல் முழுமையாகப் பயிற்சி பெற்றுவிட முடியும். மூன்று குழந்தைகளிடம் இந்த layout ஐ கொடுத்து சோதித்த போது உயிரெழுத்துக்களின் வரிசையை ஒரு நிமிடத்திலும் பிற எழுத்துக்களின் வரிசையை ஐந்து நிமிடத்திலும் புரிந்து கொண்டார்கள். எழுத்துக்களின் கூட்டிணைவை விளக்கியவுடன் அவர்கள் சரியாக தட்டச்ச தொடங்கினார்கள். தட்டச்சு முறை layout ஐ அவர்களால் சரியாகப் புரிந்து கொள்ள முடியவில்லை. (அதை முறையாகப் பயிற்சி செய்ய குறைந்தது மூன்று மாதங்களாகும்.)

12.5.2005 அன்று 21.31 மணிக்கு பதிவுசெய்யப்பட்டது. 


எழுதிக்கொள்வது: தமிழ்வாணன்

அன்பின் அனுராக்,

தற்போது காசி அண்ணா அவர்கள் மேற்கொள்ளும் வாக்கெடுப்பை வைத்துக்கொண்டும் சில முடிவுகளை பெற்றுக்கொள்ளலாம் என நினைக்கிறேன்.


தமிழ்99 தட்டெழுத்துமுறைக்கான லேவுட்டை எனக்கு அனுப்பி உதவ முடியுமா?

13.5.2005 அன்று 15.20 மணிக்கு பதிவுசெய்யப்பட்டது. 


எழுதிக்கொள்வது: anurag

mail to sanuragc at yahoo dot com

13.5.2005 அன்று 13.44 மணிக்கு பதிவுசெய்யப்பட்டது. 


எழுதிக்கொள்வது: தமிழ்வாணன்


எனது இமெயில் யாகூ முகவரி
Thamillvaanan@yahoo.com

அன்பின் அனுராக் உங்களுக்கு இமெயில் அனுப்பியுள்ளேன்.

13.5.2005 அன்று 19.39 மணிக்கு பதிவுசெய்யப்பட்டது. 


எழுதிக்கொள்வது: கோபி

நான் யாழ் கோபி எனது இணையம் எனது மின்னஞ்சல் முகவரி kobisiva@yahoo.com எனக்கு பிரதான பக்கத்தில் கருத்துப்பெட்டி தோன்ற வேண்டும் தயவ செய்து அனுப்பிவைக்கவும்

25.5.2005 அன்று 7.21 மணிக்கு பதிவுசெய்யப்பட்டது. 


எழுதிக்கொள்வது: யாழ் கோபி

உங்கள் gmail க்கு மின்னஞ்சல் அனுப்பியுள்ளேன் பதில் அனுப்பவும்

9.6.2005 அன்று 15.26 மணிக்கு பதிவுசெய்யப்பட்டது. 


எழுதிக்கொள்வது: யாழ் கோபி

திருவள்ளுவர் எழுதி அனுப்பியதற்கு நன்றி
வடிவாக வேலை செய்கிறது

12.6.2005 அன்று 11.35 மணிக்கு பதிவுசெய்யப்பட்டது. 


எழுதிக்கொள்வது: p.amarnath

தமிழ்வாணன்,என் போன்ற தமிழில் தட்டச்சு தெரியதவருக்கும், அறிந்துகொள்ள முயற்சி இல்லாதவருக்கும் ஒலியியல் முறை மிகவும் எளிது.
தமிழ்வாணன்,எனது புதிய இணையத்தில் தன்களது திருவள்ளுவர் எழுதியை பயன்படுதிகொள்ள ஆர்வமாய் உள்ளேன். தயவு செய்து amar_india@yahoo.com என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.சேவைக்கு மிக்க நன்றி.

27.8.2005 அன்று 2.00 மணிக்கு பதிவுசெய்யப்பட்டது. 


பெயர்    

இணையம் 

பாமினி ரிஸ்கி English தமிழம்

திருவள்ளுவர் எழுதி-3



© thamillvaanan 2005 - Powered for Blogger by Blogger Templates